பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹிந்தித் திரையுலகின் முக்கியமான இயக்குனர்களில் அனுராக் காஷ்யப் ஒருவர். 'இமைக்கா நொடிகள்' படத்தின் வில்லன். அடிக்கடி தமிழ்ப் படங்களைப் பார்த்து வியந்து பாராட்டித் தள்ளுவார். 'வட சென்னை' படத்தைப் பார்த்து தற்போது டுவிட்டரில் பாராட்டியிருக்கிறார்.
“வடசென்னை' நான் இதுவரை பார்த்த ஒரிஜனல் கேங்ஸ்டர் படம். எளிமையாக சொல்லியிருக்கிறார்கள். வெற்றிமாறன் தொடர்ச்சியாக அற்புதமான படங்களைத் தருகிறார். ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, தனுஷ் மற்றும் செந்தில், ராஜன், பத்மா கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா தம்பி கண்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பவர், அவருடைய அப்பாவை எதிர்க்கும் காட்சியை அதிகமாகப் பேச வேண்டும்,” எனப் பாராட்டியிருக்கிறார்.
செந்தில், ராஜன், பத்மா கதாபாத்திரங்களில் நடித்தது யார் என அனுராக் காஷ்யப்பிற்குத் தெரியவில்லை. ஒரு ரசிகர் ராஜன் ஆக நடித்தது இயக்குனர் அமீர் என சொல்ல, 'அமீரா அது' என ஆச்சரியப்பட்டிருக்கிறார் அனுராக் காஷ்யப்.