விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
பிரபுதேவா தமிழ் படங்களில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது ஹிந்தியிலும் தலைகாட்டி வருகிறார். தற்போது ஹிந்தியில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம், தக்ஸ ஆப் இந்துஸ்தான். அமீர்கான், அமிதாப்பச்சன், கத்ரினா கைப், பாத்திமா சனாகான் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஹிந்தியில் தயாரானாலும், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப் ஆகிறது. யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. விஜய் கிருஷ்ணா இயக்குகிறார்.
படத்தில் கத்ரினா கைப்பும், அமீர்கானும் ஆங்கிலேயர்களின் கோட்டைக்குள் நடனமாடுவது போன்ற காட்சி இடம்பெறுகிறது. முக்கியத்துவமான இந்த பாடல் காட்சிக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். அஜய் அத்துல் இசையமைத்துள்ளார். அமிதாப் பட்டாச்சாரியா பாடல் எழுதியுள்ளார்.
இந்த பாடலை தமிழில் மதன் கார்க்கி எழுதியுள்ளார். புகழ்பெற்ற பாடகியான ஸ்ரேயா கோஷல் மற்றும் நகாஷ் அசிஸ் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். படத்தின் ஹைலைட்டாக இந்த பாடல் காட்சி இருக்கும் என்கிறார்கள்.