பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
2004ல் செல்லமே படத்தில் நாயகனாக அறிமுகமானவர் விஷால். அந்த படம் சுமாரான வெற்றியை கொடுத்த நிலையில், அதற்கடுத்து லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்த சண்டக்கோழி படம் மிகப் பெரிய ஹிட் தந்து, விஷாலுக்கு ஒரு மார்க்கெட்டை பிடித்துக் கொடுத்தது.
அதையடுத்து பல ஹிட் படங்களில் நடித்த விஷால், தனது 25வது படமான சண்டக்கோழி-2 வில் மீண்டும் அதே லிங்குசாமி இயக்கத்தில் நடித்தார். கடந்த அக்டோபர் 18-ந்தேதி இப்படம் திரைக்கு வந்தது. இதுவரை விஷால் நடித்து வெளியான படங்களின் சென்னை வசூலில் சண்டக்கோழி-2 படமே அதிக வசூல் செய்ததாக சொல்கிறார்கள்.