'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'ஜெயம்' ரவி நடிப்பில் கடைசியாக வெளியான 'டிக் டிக் டிக்' படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. இதையடுத்து, 'ஹோம் மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் சார்பில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க, கார்த்திக் தங்கவேல் இயக்கும் 'அடங்க மறு' படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கும் இந்த படத்தில் சம்பத்ராஜ், முனீஸ்காந்த், பொன் வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
'அடங்கமறு' நவம்பர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் வியாபார விஷயங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை 15 கோடிக்கு விற்க திட்டமிட்டனர்.
அந்த விலைக்கு வாங்க யாரும் முன்வராத நிலையில் இப்படத்தை டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை ஒரு நிறுவனம் வாங்கியுள்ள்ளது. இப்படத்தின் சாட்லைட் உரிமையை விஜய் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.