பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தற்போது நடிப்பதற்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரு படம் கூட இல்லை. இதனிடையே, வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஸ்ருதிஹாசன், சமீபத்தில் லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவருடைய காதலருடன் அவர் சுற்றி வரும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அவரைப் பற்றி பாராட்டித் தள்ளி வருகிறார்.
ஏற்கெனவே, அவருடன் சென்னையில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் அப்பா கமல்ஹாசனுடனும் ஸ்ருதி கலந்து கொண்டார். மும்பையிலும் இருவரும் பல இடங்களுக்கு சுற்றி வந்தார்கள். ஏற்கெனவே இது காதல் என்று கிசுகிசுக்கப்பட்டாலும் ஸ்ருதிஹாசன் அது பற்றி வாயைத் திறக்கவில்லை.
விரைவில் ஸ்ருதிஹாசன் 'ஹலோ சகோ' என்ற டிவி நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்க உள்ளார்.