ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனுஷ் தயாரித்து, நடித்துள்ள படம் வடசென்னை, அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரகனி, கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
வெளியான சில மணி நேரத்திற்குள்ளேயே தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் படம் வெளியிடப்பட்டு விட்டது. அதனை லட்சக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர். இதனால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இந்தப் படம் 65 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. 25 நாட்கள் வரை நன்றாக ஓடினால் மட்டுமே இந்தப் பணத்தை எடுக்க முடியும். ஆனால் இப்போதே ரசிகர்களின் வருகை குறைந்துவிட்டதால் தயாரிப்பு தரப்பு கவலையில் உள்ளது.