தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் 'சர்கார்' படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த டீசர் பல புதிய சாதனைகளைப் படைக்க ஆரம்பித்துவிட்டது.
அதோடு, ஒரு புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. குறைந்த மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளைப் பெற்ற முதல் டீசர் என்ற பெருமை 'சர்கார்' டீசருக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பாக ஹாலிவுட் படமான 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளைப் பெற்றதே, ஒரு டீசர், அல்லது டிரைலரின் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 292 நிமிடங்களில் சர்கார் படம் முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
ஓர் இரவுக்குள் 1 கோடி பார்வைகள், 1 மில்லியன் லைக்குகள் என அடுத்த கட்ட சாதனையை நோக்கி 'சர்கார்' டீசர் நகர்ந்து கொண்டிருக்கிறது.