Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சபரிமலை விவகாரம் : பெண்களுக்கு சிவகுமார் எச்சரிக்கை

19 அக், 2018 - 19:53 IST
எழுத்தின் அளவு:
Sabarimalai-issue-:-Sivakumar-warns-Women

ரபேல் விவகாரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு என கடந்தவாரம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்ட அனைத்து விஷயங்களும் அப்படியே அமைதியாகிவிட்டது. இன்று நாடுமுழுக்க பரபரப்பாக பேசப்படும் இரண்டு விஷயங்கள் ஒன்று மீ டூ மற்றொன்று சபரிமலை.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க குறிப்பிட்ட வயது நிர்ணியக்கப்பட்டு, அது ஆண்டு ஆண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சுப்ரீம் கோர்ட், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என அனுமதியளித்தது. இதனால் பிரச்னை உருவானது.

தற்போது சபரிமலையில் நடை திறக்கப்பட்டுள்ளதால் பெண்ணியவாதிகள் என்று சொல்லி வரும் சில பெண்கள், தங்களை பிரபலப்படுத்தி கொள்ள சபரிமலையில் நுழைய முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பெண்களை அனுமதித்தால் கோவிலை பூட்டிவிடுவோம் என கோவில் தந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், சபரிமலை விவகாரம் குறித்து பேசும்போது, கடவுள் நம்பிக்கை உள்ள நான் கோவிலுக்கு செல்வதில்லை. எல்லா கடவுள்களின் படங்களும் என் வீட்டில் உள்ளது.

சபரிமலை கோயிலுக்கு சென்று தான் ஐயப்பனை வணங்க வேண்டும் என்பது இல்லை. வீட்டிலிருந்தும் பெண்கள், ஐயப்பனை வணங்கலாம். அதையும் மீறி அவர்கள் கோயிலுக்கு சென்று தான் வழிபடுவேன் என செல்ல முற்பட்டால் ஏதேனும் விடுமுறை நாட்களில் போய் பார்த்துவிட்டு வரலாம். அதைவிடுத்து நான் கூட்டத்தோடு தான் போவேன் என்று கூறினால், பாதுகாப்பின்மை காரணமாக பல்வேறு விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும். மக்கள் கோபமாக இருக்கிறார்கள். அதை பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் இவ்வளவு பிடிவாதம் ஏன்? என்றார்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
பேட்ட படப்பிடிப்பு நிறைவு : ரஜினிபேட்ட படப்பிடிப்பு நிறைவு : ரஜினி புதிய சாதனை படைத்த 'சர்கார்' டீசர் புதிய சாதனை படைத்த 'சர்கார்' டீசர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30 அக், 2018 - 20:55 Report Abuse
Indian Dubai It is become the practice to spoil the Hindu culture & religious beliefs. This is really very shame to all hindus. Hindus should be united and stand. All these things are d by Muslim & Christian associations to our ancient culture. Hindus should show their majority by stand unity. What this bloody supreme court jokers knows?
Rate this:
nanbaenda - chennai,இந்தியா
30 அக், 2018 - 18:30 Report Abuse
nanbaenda சரியான வாதங்கள் வேண்டுமென்றே இந்த கம்யூனிச அரசாங்கம் கோர்ட்டில் வைக்கவில்லை. எல்லா ஐயப்பன் கோவில்களில் இந்த வழக்கம் இல்லை. இந்த கோவிலில் மட்டும் ஐயப்பன் கடும் பிரம்மசரிய விரதத்தில் இருக்கிறார். ஆகையால் பருவப்பெண்களை அனுமதிப்பதில்லை. இது யாருக்கும் தீங்கு விளைவிக்காத ஒரு மத நம்பிக்கை. அது தவிர வேறு காரணங்கள் வைக்கப்படுவது தீர்ப்பை திசை திருப்பி விடத்தான்.
Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
30 அக், 2018 - 16:42 Report Abuse
narayanan iyer இது ஒருபுறம் இருக்கட்டும் . நான் இந்த ஐயப்ப பக்தர்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் விரத நாட்களில் முறையாக மன கட்டுப்பாட்டுடன் இருங்கள் . மாலை போட்டபின் செருப்பு / ஷூ போடுவது , சிகரெட் , பீடி பிடிப்பது , வெங்காயம் ,பூண்டு போன்ற உணவு வகைகளை நீக்கி உண்பது . குருமார்களை வணங்குவது போன்றவற்றை முறையாக செய்து காண்பியுங்கள் . நானும் கோவிலுக்கு போய் வருகிறேன் என்று இல்லாமல் பய உணர்வுடன் செல்லுங்கள் மற்றவரையும் அப்படி செய்ய சொல்லுங்கள் . குருமார்களின் கடமை இது .
Rate this:
Somiah M - chennai,இந்தியா
26 அக், 2018 - 17:45 Report Abuse
Somiah M சுவாமி அய்யப்பனை தரிசிக்க பெண்களை அனுமதிக்க வேண்டாம் என்பதற்கு கூறப்படும் காரணங்களில் ஒன்று பாதுகாப்பு என்பது .அதுதான் காரணம் என்றால் பெண்களை சிறிய பாதையில் செல்ல அனுமதிக்கலாமே.இந்து பெண்கள் எவரும் "அந்த"குறிப்பிட்ட நாட்களில் கோயிலுக்குள் நுழைவதில்லையே .மத தலைவர்கள் பரிசீலிக்க வேண்டும் .அனைவரையும் சமமாகப் பார்க்கும் நம் மதம் இந்த விஷயத்திலும் ஆலோசிக்கலாமே .
Rate this:
shyamnats - tirunelveli,இந்தியா
23 அக், 2018 - 07:44 Report Abuse
shyamnats இதில் கிறித்தவ மற்றும் முஸ்லீம் பெண்களுக்கு என்ன வேலை? மிகவும் கண்டிக்க தக்கது.
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in