'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஹ்மான் இசை. தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் கார்பரேட்டில் உயரதிகாரியாக வேலை பார்க்கும் விஜய், ஓட்டு போட இந்தியா திரும்புகிறார். அவரது ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட, அதனால் வெகுண்டெழும் விஜய், தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் அரசியல் ஆட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி அரசியல்வாதிகளுக்கு ஆட்டம் காண்பிக்கிறார் என்பது கதையாக இருக்கும் என சர்கார் டீசர் உணர்த்துகிறது.
1.33 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசரில், "அவன் ஒரு கார்பரேட் மான்ஸ்டர் எந்த நாட்டிற்கு போனாலும் தன்னை எதிர்ப்பவர்களை அழித்துவிட்டு தான் வெளியே போவான்" என விஜய்யின் அறிமுகம் துவங்க, பின்னணியில் வரலட்சுமி குரல் கொடுக்கிறார்.
"இன்னும் ஓரிரு நாளில் என்னவெல்லாம் நடக்க போகிறது என ஓரமாக நின்று வேடிக்கை பாரு, நான் கார்பரேட் கிரிமினல். உங்க ஊரு தலைவன தேடி பிடிங்க, இது தான் நம்ம சர்கார்" என விஜய் பேசும் டயலாக்குகள் இடம் பெற்றுள்ளன.