Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொய் மூட்டைகளை நிரூபிக்க ஆதாரம் உள்ளது : லீனா மணிமேகலைக்கு சுசி கணேசன் பதிலடி

16 அக், 2018 - 13:27 IST
எழுத்தின் அளவு:
Director-Susi-Ganesan-reply-to-leena-manimekalai

கவிஞரும், குறும்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அதில், கடந்த 2005-ம் ஆண்டு தொகுப்பாளனியாக வேலை பார்த்தபோது நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு சென்றபோது இயக்குநர் சுசி கணேசன், காரில் வீட்டில் இறக்கி விடுவதாக சொல்லி, காருக்குள் வைத்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

இதை மறுத்து சுசி கணேசன் விளக்கம் அளித்துள்ளார். அதில், லீனா மணிமேகலை உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் உருளும் பன்றி, வெள்ளைச் சட்டையோடு சுற்றுபவர்களை பார்த்து எப்படி பொறாமைப்படுமோ அப்படி ஒரு சம்பவத்தை உங்கள் கற்பனைத் திறனோடு ஒரு கதை பண்ணியிருக்கிறீர்கள்.


இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நீருபித்துவிட்டீர்கள். உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால், ஒருவேளை இந்த பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ??? அரை மணிப் பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலியே, ஒருவர் தனியாக காரில் ஏறச்சொன்னால் ஏறிக்கொள்ளும் புதுமைப் பெண்ணான நீங்கள், கத்தியை அந்த அப்பாவி(ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ) நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர். அத்தைனையும் பொய் மூட்டைகள் என்பதை நிருபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது.


அவற்றை வெளியிடுவதற்கு முன் என்னை கொச்சைப்படுத்திய அதே பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன். இல்லையென்றால் கோர்ட் மூலமாக மான நஷ்ட்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை, உன்னைப் போன்ற MeToo இயக்கத்தை சுய பழிவாங்களுக்கு பயன்படுத்தும் "சமுதாய வைரஸ்களை" களை எடுப்பதற்கு பயன்படுத்துவதைத் தவிற வேறு வழியில்லை.


சமூகவலைதள நண்பர்களுக்கு தயவு செய்து MeToo-இயக்கத்தை திசைதிருப்பும் இதுபோன்ற வக்ர புத்தி கொண்டவர்களை அடையாளம் கண்டு தவிர்த்து விடுங்கள். லீலா மணிமேகலை என்னிடம் கேட்டது இரண்டு உதவிகள். உதவி இயக்குனர்/பாடல் ஆசிரியர். இரண்டும் என்னால் செய்ய முடியவில்லை. குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில், சினிமா உலகம் அறியும் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித் துப்பமுடியாமல், ஏனோ என்மீது வன்மைத்தை துப்பியிருக்கிறார்.


கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூரையாடியிருக்கிறார். என் குடும்பம், வேதனைபோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள்.


இவ்வாறு சுசி கணேசன் பதிவிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
பாண்டி முனி படப்பிடிப்பில் 400 அகோரிகள்பாண்டி முனி படப்பிடிப்பில் 400 ... விஜயலெட்சுமிக்கு வெங்கட்பிரபு சிபாரிசு விஜயலெட்சுமிக்கு வெங்கட்பிரபு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

TR BALACHANDER - erode,இந்தியா
16 அக், 2018 - 16:39 Report Abuse
TR BALACHANDER ஊசி இடம் தராமல் நூல் உள்ளெ செல்லாது ???????
Rate this:
16 அக், 2018 - 16:32 Report Abuse
suraGopalan அடுத்து தளபதி விஜய் தான் waiting for #metoo.... I am waiting
Rate this:
shankar - chennai,இந்தியா
16 அக், 2018 - 15:48 Report Abuse
shankar தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குககள் பல தேங்கி இருக்கிறது முதலில் அதற்கு ஒரு முடிவு சொல்லட்டும் தொழிலாளர்கள் பலர் வேதனையில் வாடுகின்றனர். இவர்களுக்கு ஒரு தனி நீதிமன்றமா
Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
16 அக், 2018 - 15:04 Report Abuse
pattikkaattaan இதெல்லாம் எங்க போயி முடியுமென்று தெரியவில்லை
Rate this:
Robins - Chennai,இந்தியா
16 அக், 2018 - 14:05 Report Abuse
Robins சூப்பர் சுசி
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in