Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன்

15 அக், 2018 - 19:59 IST
எழுத்தின் அளவு:
Leena-Manimegalai-accuses-director-susi-ganesan

மி டூ விவகாரத்தால் தினம் ஒரு திரைப்பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கி வருகின்றனர். அந்தவகையில் இன்றைய பிரபலம் இயக்குநர் சுசி கணேசன்.

திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே 2 போன்ற படங்களை இயக்கி உள்ள இவர் மீது கவிஞரும், குறும்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக அம்பலப்படுத்தி உள்ளார்.

மலையாள நடிகை ஒருவர், காரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சமயத்தில் தனது பேஸ்புக்கில், இயக்குநர் ஒருவர் காரில் வைத்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தார் லீனா. தற்போது அதே பதிவை மீண்டும் பகிர்ந்து, அந்த இயக்குநர் சுசி கணேசன் என வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

லீனா மணிமேகலை பேஸ்புக்கில் அன்று பதிவிட்ட பதிவு...

2005 இருக்கும். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் வேலை செய்துக் கொண்டிருந்தேன். அன்று ஒரு பிரபல இளம் இயக்குநரை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நேர்காணல் செய்தேன். ஷூட்டிங் முடிந்தபோது இரவு ஒன்பதரை மணி. வழக்கமாக நான் ஆட்டோ எடுத்து தான் வீடு திரும்புவது வழக்கம். ஸ்டூடியோவில் இருந்து தெருமுனை வரை நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, நான் நேர்காணல் செய்த இயக்குநரின் கார் என்னருகில் வந்து நின்றது.

பாலியல் தொல்லை : "வடபழனி தானே வீடு, நான் வேணும்னா ட்ராப் பண்ணிடறேன்" என்று சொன்ன "இயக்குநரை" நம்பி காரில் ஏறினேன். ஏறிய சில நிமிடங்கள் உரையாடல் நன்றாகத்தான் போனது. திடீரென அவர் குரலின் டோன் மாறியது. விலை உயர்ந்த அந்தக் காரின் சென்டரல் லாக் சத்தமாக ஒரு முறை சீறி அடங்கியது. என் மடியில் இருந்த மொபைலைக் கைப்பற்றி அதை ஆஃப் செய்து காருக்குள் எங்கோ எறிந்தார். தன் அபார்ட்மெண்டுக்கு நான் வரவேண்டும் என்று மிரட்டினார். அதிர்ச்சியில் வெலவெலத்துப் போன எனக்கு கொஞ்சநேரம் எதுவும் புரியாமல் செயலிழந்துப் போனேன்.


சுதாரித்து முதலில் தன்மையான குரலில் என்னை உடனே இறக்கிவிடுமாறு கேட்டேன். பின் கெஞ்சிக் கேட்டேன். கார் கதவை உடைத்து விடுவேன் என மிரட்டினேன். அலறினேன். இருபது நிமிடத்தில் விட வேண்டிய இடத்திற்கு 45 நிமிடங்களாக கார் சென்னை தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தது.காப்பாற்றிய குறுங்கத்தி : என் பையில் ஒரு குறுங்கத்தி வைத்திருப்பேன். பொறியியல் கல்லூரி காலத்தில் இருந்து எனக்கு அது வழக்கம். அன்று அதற்கு வேலை வந்தது. ஒரு குறுங்கத்தி அந்த இயக்குநர் பொறுக்கியை என்னை என் வீட்டின் அருகில் இறக்கிவிட வைத்தது. என் மொபைலை திருப்பித் தர வைத்தது.

அன்று தைரியமில்லை : இன்று இவ்வளவு ரைட்ஸ் பேசும் எனக்கு அன்று நடந்ததை நெருக்கமானவர்களிடம் சொல்வதற்கு கூட தைரியமில்லை. ஊடக வேலை வேண்டாம் என்று கண்டித்துக் கொண்டிருந்த குடும்பம் இந்த நிகழ்வை காரணம் காட்டி வேலையில் இருந்து நின்றுவிட சொல்வார்கள் என்று அச்சம். "நோ" சொல்லிவிட்டதால் திரைத்துறை வட்டாரத்தில் செல்வாக்குள்ள அந்த "இயக்குநர்" என் பெயரைக் களங்கப்படுத்துவான் என்ற சிறுபிள்ளைத்தனமான பதட்டம் வேறு. எனக்குள்ளே புதைத்த பல கசப்புகளில் இந்நிகழ்வும் ஒன்று. பல வருடங்கள் கடந்துவிட்டன. நினைத்துப் பார்த்தால் இன்னும் நடுக்கமாகத் தான் இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணிமன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை ... தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
18 அக், 2018 - 06:14 Report Abuse
R KUMAR சில நாட்களில் கணவன் மீது கூட பாலியல் பலாத்காரம் கூறி, மனைவியிடமிருந்து புகார்கள் வரக்கூடும்.
Rate this:
sahayadhas - chennai,இந்தியா
16 அக், 2018 - 01:59 Report Abuse
sahayadhas பாலியல் தொந்தரவுனு தெரிஞ்சுகிட்டே 15 ஆண்டுகள் அங்கே குப்பையை கொட்டிருக்கு .
Rate this:
sankar - london,யுனைடெட் கிங்டம்
16 அக், 2018 - 00:36 Report Abuse
sankar என்னடா இது .... மாட்டுவது எல்லாம் சின்ன மீன்களாகவே இருக்கிறது .... எப்போது சுறா ?? திமிங்கிலம் ?? எல்லாம் மாட்டும் ....
Rate this:
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16 அக், 2018 - 00:10 Report Abuse
Ramesh Rayen செஸ் வெறிதான் இதற்கெல்லாம் காரணமா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film ONGALA PODANUM SIR
  • ஒங்கள போடணும் சார்
  • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
  • நடிகை : சனுஜா சோமநாத்
  • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
  Tamil New Film Kadhal Munnetra Kazhagam
  Tamil New Film Charlie Chaplin 2
  • சார்லி சாப்ளின் 2
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in