பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வைரமுத்து மீது சின்மயி கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு, சினிமா வட்டாரத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா, சமந்தா, வரலட்சுமி உள்ளிட்ட சில நடிகைகள் வரவேற்றுள்ளனர். நடிகர் சித்தார்த் ஆரம்பத்தில் இருந்தே சின்மயிக்கு தனது ஆதரவினை தெரிவித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு விஷால், வைரமுத்து மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில், நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், வைரமுத்து மீது சின்மயி தைரியமாக குற்றம் சாட்டியிருப்பதை பாராட்டுகிறேன். பெண்கள் தாய்க்கு சமமானவர்கள். அவர்கள் மீது அனைவரும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். சினிமா துறையில் உள்ள பெண்கள் மட்டுமின்றி அனைத்து பெண்களையும் மதிக்க வேண்டும்.
சின்மயி போன்று பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தைரியமாக வெளியில் கொண்டு வந்தால், இதுபோன்ற குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார் சரத்குமார்.