ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல நடிகரும் ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு அதே பெயரிலேயே படமாக உருவாகி வருகிறது. இதில் அவரது மகன் பாலகிருஷ்ணாவே தந்தை வேடத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் என்.டி.ஆரின் மூத்தமகனான ஹரிகிருஷ்ணா கேரக்டரில் அவரது மகன் கல்யாண் ராமே நடிக்கிறார்.
இதுபற்றி குறிப்பிட்டுள்ள கல்யாண் ராம் எனது சித்தப்பா அவரது தந்தையின் கேரக்டரில் நடிப்பது போல, நான் எனது தந்தையின் கேரக்டரில் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.
சினிமா நடிகராக மட்டுமல்லாமல், அரசியல்வாதியாகவும் வலம்வந்த ஹரிகிருஷ்ணா நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கல்யாண்ராமின் தந்தை ஆவார்... சமீபத்தில்தான், ரசிகர் ஒருவரின் திருமண விழாவுக்கு செல்லும்போது கார் விபத்து ஒன்றில் ஹரிகிருஷ்ணா பலியானார். என்பது குறிப்பிடத்தக்கது.