‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்திற்குப் பிறகு 'தேவர் மகன் 2' படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்துள்ளார். 'தேவர் மகன் 2' படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என்ற தகவலை நாம் எப்போதே வெளியிட்டிருந்தோம். 'இந்தியன் 2' படப்பிடிப்பு முடிந்ததும் கமல்ஹாசன் இதன் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம்.
'தேவர் மகன்' படத்தின் முதல் பாகம் 1992ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க உள்ளார். முதல் பாகத்தை மலையாள இயக்குனர் பரதன் இயக்க இளையராஜா இசையமைத்திருந்தார். அதில் இடம் பெற்ற 'போற்றிப் பாடடி பெண்ணே, இஞ்சி இடுப்பழகி' பாடல்கள் மிகப் பெரும் ஹிட்டாக அமைந்தன.
இரண்டாம் பாகத்தை யார் இயக்கப் போவது, இசையமைக்கப் போவது யார், உடன் நடிக்கப் போவது யார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. கமல்ஹாசன் அடுத்து நடிக்கப் போகும் இரண்டு படங்களுமே இரண்டாம் பாகப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.