இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தாமிரா இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில், சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ள ஆண் தேவதை படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் 2006ம் ஆண்டு வெளியான தி பர்சுயிட் ஆப் ஹேப்பினஸ் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பது தெரிய வந்துள்ளது. படத்தின் ஆரம்பத்திலேயே இது பற்றிய கார்டையும் போட்டுவிடுகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
கேப்ரியல் மக்கினோ இயக்கத்தில் வில் ஸ்மித், தான்டி நியூடன், ஜேடன் ஸ்மித் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். தி பர்சுயிட் ஆப் ஹேப்பினஸ் என்றால் மகிழ்ச்சியான நோக்கத்திற்காக என்று அர்த்தம். ஆண் தேவதை படத்திலும் தன் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன் மகன், மனைவி ஆகியோரை விட்டுப் பிரிகிறார் சமுத்திரக்கனி.
ஆங்கிலப் படத்தில் வில் ஸ்மித் நடித்த கதாபாத்திரத்தில்தான் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் மகன் மட்டுமே, தமிழில் மகன், மகள் என இரட்டையர்களாக மாற்றிவிட்டார்கள். அதில் எக்ஸ்ரே ஸ்கேனர் விற்பனைப் பிரதிநிதியாக இருந்து பின்னர் பங்குச் சந்தை புரோக்கர் ஆக விஸ் ஸ்மித் மாறுவார். தமிழில் மருத்துவ விற்பனைப் பிரதிநிதியாக இருந்து ஹோட்டலில் சமையல்காராக மாறுவார் சமுத்திரக்கனி.
தி பர்சுயிட் ஆப் ஹேப்பினஸ் படமே ஒரு உண்மைக் கதையின் அடிப்படையில் உருவான படம்தானாம்.