இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கவிஞர் வைரமுத்து - பாடகி சின்மயிக்கு இடையிலான பாலியல் குற்றச்சாட்டு இந்திய அளவில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இதுகுறித்து பெரும்பாலான பிரபலங்கள் கருத்து சொல்ல முன்வரவில்லை என்றபோதும், சித்தார்த், சமந்தா, வரலட்சுமி, கஸ்தூரி, ஸ்ரீ ரெட்டி உள்பட பலர் சின்மயிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஸ்வர்ணமால்யாவும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதோடு, இந்த பிரச்சினை குறித்து சட்டரீதியாக அணுகுவது சம்பந்தமான தான் சில சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு இந்த சட்ட நடவடிக்கை பாடம் புகட்டும் வகையில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.