ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பூவரசம் பீ பீ படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் இயக்கும் அடுத்த படம் சில்லுகருப்பட்டி. இதில் சமுத்திரகனி, சுனைனா, சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரதீப் குமார் இசை அமைக்கிறார். டிரையன் புரொடக்சன் சார்பில் வெங்கடேஷ் வெள்ளினேனி தயாரிக்கிறார். படம் பற்றி ஹலீதா, ஷமீம் கூறியதாவது:
இந்தப் படத்தில் நான்கு வெவ்வேறு கதைகள் உள்ளன. அதில் ஒரு கதையில் தான் சமுத்திரக்கனி - சுனைனா ஜோடி ஒரு நடுத்தர வயது தம்பதியராக நடித்து உள்ளனர். நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒரு சராசரி தம்பதியனரின் வாழ்வியல் முறையை பதிவு செய்யும் அத்தியாயம் இவர்களுடையது.
இவர்களுடன் ஓகே கண்மணி படத்தின் மூலம் பிரபலமான லீலா சாம்சன் ஒரு கதையிலும், தெய்வ திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன், ஒரு கதையில் நடிக்கிறார். நிவேதிதா சதிஷ் - மணிகண்டன் ஆகியோர் ஒரு கதையிலும் நடித்து உள்ளனர்.
இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் நான்கு வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றி உள்ளனர். மனோஜ் பரமஹம்ஸா, அபிநந்தன் ராமானுஜம், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் ஆகியோர் தங்களது தனித்திறமைகளை தங்களுக்கு அளிக்கப்பட்ட பகுதிகளில் திறம்பட வெளிப்படுத்தி உள்ளனர். அனைத்து தரப்பினரும் ரசித்து பார்க்கும் படமாக இருக்கும். என்றார்.