கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் |
கடைக்குட்டி சிங்கம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடித்து வரும் படம் தேவ். ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்க, அறிமுக இயக்குனர் ரஜத் ரவி ஷங்கர் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண் தயாரிக்கிறார்.
அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங்க் சமீபத்தில் குலுமணாலியில் நடந்தது. ஆனால், அங்கு ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
தற்போது, இதன் இறுதிக்கட்ட சண்டைக்காட்சிக்கான படப்பிடிப்புகள் இமயமலையில் நடக்கிறது. அன்பறிவ் சண்டைக்காட்சியை படமாக்குகிறார்கள். இதோடு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது.
இது ஒருபுறம் இருக்க தேவ் படத்தின் டப்பிங் பணிகளும் துவங்கி உள்ளன. இதை பூஜையுடன் நேற்று துவங்கி உள்ளனர். விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது.