ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் இந்த 2018ம் வருடத்தில் அதிகப் படங்களில் நடித்த நடிகை என்ற பெயரை எடுக்க இருப்பவர் வரலட்சுமி ஆகத்தான் இருக்கும். இந்த ஆண்டில் அவர் நடித்த 'மிஸ்டர் சந்திரமௌலி, எச்சரிக்கை' ஆகிய படங்கள் ஏற்கெனவே வெளிவந்துவிட்டன. அடுத்த வாரம் 'சண்டக்கோழி 2' படமும், அடுத்த மாதம் 'சர்கார்' படமும் வெளியாக உள்ளன. அவற்றுக்குப் பிறகு 'கன்னி ராசி, நீயா 2' ஆகிய படங்கள் வெளிவரலாம்.
தெலுங்கில் இதுவரையில் எந்தப் படத்திலும் நடிக்காத வரலட்சுமி, முதல் முறையாக தெலுங்கில் சொந்தக் குரலில் டப்பிங் பேச உள்ளார். 'சண்டக்கோழி 2, சர்கார்' ஆகிய படங்களுக்காக அவரே தெலுங்கில் டப்பிங் கொடுத்து வருகிறார். 'சண்டக்கோழி 2' படத்திற்காக டப்பிங் பேசி முடித்த அவர், அடுத்து 'சர்கார்' படத்திற்காகப் பேசி வருகிறார்.