டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம் கோபால் வர்மா. டான்களையும் ஹீரோவாக்கி படம் எடுத்தவர். இவர் தற்போது அதிக பொருட்செலவில் பைரவா கீதா என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.
இதில் தனஞ்ஜெயா என்ற நாயகனும், ஈரா என்ற நாயகியும் அறிமுகமாகிறார்கள். அறிமுக இயக்குநர் சித்தார்த் தாதூலு இயக்கியிருக்கிறார். சாதி பிரச்சினைகளின் பின்னணியில் தயாராகியிருக்கும் 'பைரவா கீதா', இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது.
அபிஷேக் நாமா மற்றும் பாஸ்கர் ராஷி ஆகியோர் தங்களின் அபிசேக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இதனை வெளியிடுகிறார்கள். 'அக்டோபர் 26 ஆம் தேதியன்று வெளியாகிறது.