டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரேமம் படத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் அறிமுகமானார். தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக இருக்கிறார். ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு தடா போட்டு வந்த அவர், தற்போது ஓரளவு மிதமான கவர்ச்சி நாயகியாக உருவெடுத்திருக்கிறார்.
அனுபமா பரமேஸ்வரனுக்கு சினிமாவில் பின்னணி பாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம். இந்த தகவலை அவர் தற்போது வெளியிட்டிருக்கிறார். அதோடு சிறுவயதில் இருந்தே நான் நன்றாக பாடுவேன். அதனால் யாராவது இசையமைப்பாளர்கள் பாட அழைத்தால் அதை எனது அதிர்ஷ்டமாக கருதுவேன் என்று கூறியுள்ளார்.
இப்போதைய நடிகைகளில் ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் உள்பட சிலர் பின்னணி பாடி வருவது தெரிந்ததே. அந்த பட்டியலில் விரைவில் அனுபமா பரமேஸ்வரனும் இணைந்து விடுவார் என்று தெரிகிறது.