இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மூலம் அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சதா. தெலுங்கில் நான்கைந்து படங்களிலும், ஹிந்தியில் ஒரு படத்திலும் நடித்திருக்கிறார். தமிழில் அவர் அறிமுகமான முதல் படத்திலேயே அவருக்கு சில காட்சிகள் தான் இருந்தன. பின்னர், அதையும் படத்திலிருந்து நீக்கிவிட்டார்கள். அதற்கு இயக்குனர் சுசீந்திரனும் மிகவும் வருத்தம் தெரிவித்திருந்தார்.
அடுத்து, அவர் நாயகியாக நடித்த படமான 'நோட்டா' படம் இன்று வெளியானது. இந்தப் படத்திலும் மெஹ்ரினுக்கு முக்கியத்துவம் இல்லை. படத்தில் அவர் நடித்துள்ள சில காட்சிகள் தான் இடம் பெற்றுள்ளன. நாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் டூயட் வேறு கிடையாது. ஏன், படத்தில் இருவருக்கும் ஒரு காதல் காட்சி கூட இல்லை.
படத்தில் மற்றொருமொரு கதாபாத்திரத்தில் இளம் பெண் அரசியல்வாதியாக நடித்துள்ள புதுமுகம் சஞ்சனாவுக்கு மெஹ்ரினை விட அதிக காட்சிகள் உள்ளன. படத்தின் நாயகி என்று சொன்னால் சஞ்சனாவைக் குறிப்பிடும் அளவிற்குக் அவருக்குக் காட்சிகளும், வசனங்களும், முக்கியத்துவமும் இருக்கின்றன.