பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
கோலமாவு கோகிலா படத்தை அடுத்து சர்ஜுன் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகயுள்ளது.
இந்தப்படத்தையடுத்து, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் நயன்தாரா. ஏ.எல்.விஜய் இயக்குவதாக அறிவித்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படம் இது என்று முதலில் தகவல் வெளியானது. அந்த தகவல் உண்மையில்லை.
இவர்கள் இணையும் படம் திரில்லர் கதை. தற்போது 'தேவி 2' படத்தை மொரீஷியஸ் தீவில் படமாக்கி வருகிறார் விஜய். 30 நாட்கள் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இம்மாத இறுதியில் சென்னை திரும்புகிறார்.
அதன் பிறகு, நயன்தாரா நடிக்கும் புதிய படத்துக்கான வேலைகளை தொடங்க உள்ளார். அதன் பிறகே ஜெயலலிதா வாழ்க்கைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் ஏ.எல்.விஜய்.