ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்தியத் திரையுலகில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அதிகம் வருவதில்லை. தமிழில் மட்டும் நயன்தாரா நடித்து வெளிவந்த சில படங்கள் வெற்றி பெற்றன. தெலுங்கில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சில படங்கள் வந்தாலும் அவை வியாபார ரீதியாக வெற்றி பெறுவதில்லை.
நயன்தாரா, தெலுங்கில் நடித்த 'அனாமிகா' மற்றும் த்ரிஷா நாயகியாக நடித்த 'நாயகி' ஆகிய படங்கள் பெரிய தோல்வியைத் தழுவின. அந்த வரிசையில் அந்த அளவிற்குத் தோல்வி இல்லை என்று சொன்னாலும் வரவேற்பில் தோல்வியைத் தழுவி வரிசையில் சமந்தாவும் இடம் பெற்றுவிட்டார்.
சமந்தா நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த 'யு டர்ன்' படம் 30 சதவீத அளவிற்கு நஷ்டத்தைக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தியேட்டர் உரிமை 9.50 கோடிக்கு விற்கப்பட்டதாம். ஆனால், மொத்தமாக 6.5 கோடிதான் வசூலானாதாம். இருப்பினும் டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றின் மூலம் அந்த 30 சதவீத நஷ்டத்தைத் தயாரிப்பாளர்கள் சரிக்கட்டி விடுவார்கள் என்கிறார்கள்.
கன்னடத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்படும் படங்கள் பெரிய வெற்றியைப் பெறுவதில்லை. கடந்த மாதம் வெளிவந்த மற்றுமொரு கன்னட ரீமேக் படமான '60 வயது மாநிறம்' படமும் தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.