ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சாம் இசையமைப்பில் விஜய் தேவரகொன்டா, மெஹ்ரீன், சத்யராஜ், நாசர், எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'நோட்டா'. நாளை மறுநாள், அக்டோபர் 5ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.
இந்தப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு தமிழ், தெலுங்கில் வியாபாரம் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இரண்டு மொழிகளிலும் சேர்த்து தியேட்டர் உரிமை சுமார் 25 கோடி வரை விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, இரண்டு மொழிகளின் டிஜிட்டல் உரிமைகளை நல்ல விலைக்கு விற்று படத் தயாரிப்புக்கான செலவில் பாதி தொகை அளவிற்கு தயாரிப்பாளர் பெற்றுவிட்டாராம்.
தியேட்டர்கள் மூலம் இரு மொழிகளிலும் சேர்த்து சுமார் 30 கோடி வசூலித்தாலே படம் ஹிட்டாகிவிடும் என்கிறார்கள். அதற்கு மேல் வசூலித்தால் இந்தப் படம் சூப்பர்ஹிட் ஆவதற்கு வாய்ப்புள்ளதாம். விஜய் தேவரகொன்டா நடித்து இதற்கு முன்பு வெளிவந்த தெலுங்குப் படங்கள் நல்ல வசூல் பெற்றதால் இந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தமிழிலும் விஜய் தேவரகொன்டாவிற்கு வரவேற்பு கிடைத்துவிட்டால் இந்தப் படம் இரண்டு மொழிகளிலும் பெரிய வெற்றியைப் பெறும் என்று கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.