பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
உதய நிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீசின் நிர்வாக தயாரிப்பாளர் மற்றும் இணைத் தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி. அடிப்டையில் இவர் ஒரு ஓட்டப்பந்தைய வீரர். 16-வது சென்னை மாவட்ட அத்லெட்டிக் போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் செண்பகமூர்த்தி 50 வயதுக்கு மேற்பட்டவர்ளுக்கான ஒட்டப்பந்தையத்தில் முதலிடம் பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்யா பேசியதாவது : ஒவ்வொரு ஆண்டும் நான் தவறாமல் இந்த அத்லெடிக் போட்டிகளை காண வருவேன். இவர்களுடன் நான் போட்டி போட்டு ஓடினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. அந்த அளவுக்கு உடல் வலிமையோடும், அர்ப்பணிப்போடும் கலந்து கொண்டு ஒடுகிறார்கள்.
இவர்களை பார்த்தாலே நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது. இவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கூட கலந்து கொள்கிறார்கள். நாம் தான் நமது உடல்நிலையை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. இவர்களை போல நாமும் உடலை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார் ஆர்யா.