பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வெயில் படத்தின் மூலம் ஜி.வி. பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தவர் வசந்தபாலன். தற்போது அவரது இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'ஜெயில்'.
ஆர்யாவின் 'எங்கவீட்டு மாப்பிள்ளை' டிவி நிகழ்ச்சி புகழ் அபர்ணதி இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். பள்ளிப்பருவத்திலே படத்தில் ஹீரோவாக நடித்த நந்தன் ராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. குறுகிய நாட்களிலேயே படப்பிடிப்பு முடிந்துவிட்டது. காரணம் கால்ஷீட் கொடுத்தபடி ஒருநாள் கூட சொதப்பாமல் படப்பிடிப்புக்கு வந்து ஒத்துழைப்பு கொடுத்தாராம் ஜி.வி.பிரகாஷ். இந்த விஷயத்தை ஜெயில் படக்குழுவினர் வியந்து பேசுகின்றனர்.
'சவரக்கத்தி', 'இரும்புத்திரை' ஆகிய படங்களை வாங்கி வெளியிட்ட 'கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனம் இந்தப்படத்தை, தயாரித்திருக்கிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையை ஒட்டிய கண்ணகி நகரில் வசிப்பவர்கள் பற்றிய கதை என்பதால் பெரும்பாலான காட்சிகளை அங்கேயே படமாக்கியுள்ளனர்.
கண்ணகி நகர் மக்களின் வாழ்வியலை வசந்தபாலன் யதாரத்தமாக படம் பிடித்துள்ளாராம். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசை அமைத்திருக்கிறார்.