'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர். 80-களின் சூப்பர் ஸ்டாராக இருந்தார். மேரா நாம் ஜோக்கர், பாபி, ஹெல் ஹெல் மெயின், ஹபி ஹபி, கர்ஷ், அமர் அக்பர் அந்தோனி, உள்ளிட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தவை.
66 வயதாகும் ரிஷிகபூர், தற்போது சினிமாவில் தனக்கு ஏற்ற வேடங்களில் நடித்து வருகிறார். அவரது மகன் ரன்வீர் கபூர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரிஷிகபூர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதில் சரியான பலன் கிடைக்கவில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கதில் ரிஷி கபூர் கூறியிருப்பதாவது : எனது பணியில் இருந்து சிறிய ஓய்வு எடுத்துக் கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். தேவையில்லாத வதந்திகளையும் பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.