இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இன்றைய தேதியில் மானஸ்வியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக கலக்கியவர். "சொட்ட சொருகிடுவேன்" என்று மானஸ்வி பேசிய வசனம்தான் இன்றைக்கு சோசியல் மீடியா டிரெண்டிங்.
இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு மானஸ்வி பிசியான குழந்தை நட்சத்திரமாகிவிட்டார். சதுரங்க வேட்டை 2ம் பாகம், கும்கி 2ம் பாகம், பரமபத விளையாட்டு, சுட்டுப்பிடிக்க உத்தரவு, இருட்டு உள்பட 20 படங்களை கையில் வைத்திருக்கிறார் மானஸ்வி.
மானஸ்வியின் தந்தை கொட்டாச்சியும் ஒரு காமெடி நடிகர்தான். அம்மா அஞ்சலி டப்பிங் ஆர்டிஸ்ட்."சினிமாவில் எந்த காட்சியை பார்த்தாலும் அதை அப்படியே செய்து காட்டுவாள். சினிமா வசனத்தை அப்படியே பேசுவாள். அதை நான் மொபைல்போனில் வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் போடுவேன். அதை பார்த்துவிட்டுதான் இமைக்கா நொடிகள் படத்தில் வாய்ப்பு வந்தது. நான் சினிமாவில் பெரிய நடிகராகும் கனவில் வந்தேன். ஏதோ சின்ன காமெடி நடிகனாக ஆனேன். ஆனால் என் மகள் பின்னாளில் பெரிய நடிகையாக வருவாள் என்று எல்லோரும் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது. நயன்தாரா மேடம் அடிக்கடி போன் பண்ணி மானஸ்வியுடன் பேசுவார். அவரை பேபிம்மா என்று செல்லமாக கூப்பிடுவார். நயன்தாராவை மானஸ்வி அம்மா என்றுதான் அழைப்பாள்" என்கிறார் கொட்டாச்சி.