ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு காலத்தில் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வரும் நடிகர் நடிகைகளுக்கு வரவேற்பு இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் சமீபகாலமாக சினிமா நடிகர், நடிகைகளே சின்னத்திரையில் தோன்ற ஆசைப்படும் அளவுக்கு சின்னத்திரை பிரபலமாகி விட்டது.
அதனால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றிய கமல்ஹாசன், சினிமாவில் கிடைத்ததை விட பெரிய புகழ் சின்னத்திரையில் தனக்கு கிடைத்ததாக சொன்னார். அவரைத்தொடர்ந்து விஷாலும் சின்னத்திரைக்கு வருகிறார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் பிசியான காமெடியனாக நடித்து வரும் சூரியும், தற்போது கலர்ஸ் தமிழ் சேனலுக்காக உருவாகி வரும் திருமணம் என்ற தொடரில் நடித்துள்ளார். ஆனால், அவர் சீரியலின் கேரக்டராக தோன்றவில்லை. திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு செல்பி எடுத்துக்கொள்வது போன்று ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இதே கலர்ஸ் சேனலில் நடிகர் ஆர்யா, எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.