அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் 'பேட்ட' படத்தில் மேகா ஆகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேகா, தமிழில் நடித்து முடித்துள்ள 'ஒரு பக்க கதை, எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அதற்குள் ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துவிட்டது.
சில நாட்களுக்கு முன்பு 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பில் மேகா கலந்து கொண்டார். அப்போது ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அதை டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். “கனவு நனவானது, சில சமயங்களில் நட்சத்திரங்களை நீங்கள் தொடும் போது.... என் சிரிப்பே அதைச் சொல்லும், தி சூப்பர்ஸ்டார்' எனக் கூறியுள்ளார் மேகா.
ரஜினிகாந்த்துடன் சீனியர் நடிகைகளான சிம்ரன், த்ரிஷா ஆகியோர் 'பேட்ட' படத்தில் தான் முதல் முறையாக நடிக்கிறார்கள். அதே சமயம், அறிமுக நடிகையாக இருக்கும் மேகாவும் முதல் முறையாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.