Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நல்ல விலைக்குப் போன 'சர்கார், 96' தெலுங்கு உரிமை

29 செப், 2018 - 15:09 IST
எழுத்தின் அளவு:
Sarkar,-96-Telugu-rights-sold-high

விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்க பிரேம்குமார் இயக்கத்தில் அடுத்த வாரம் வெளியாக உள்ள '96', விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாக உள்ள 'சர்கார்' ஆகிய இரண்டு படங்களின் தெலுங்கு உரிமை நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

இதில் '96' படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. 'சர்கார்' படம் தெலுங்கில் டப்பிங் ஆகி தமிழில் வெளியாகும் அதே தினத்தில் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.

'96' படம் தமிழில் வெளியீட்டிற்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்டதால் தெலுங்கின் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு படத்தைப் பார்த்து வியந்து உடனே ரீமேக் உரிமையை வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஒரு கோடிக்கும் அதிகமாக விலை போனதாகத் தகவல்.

தெலுங்கின் இளம் நாயகனான நானி, '96' படத்தைப் பார்த்து பல காட்சிகளில் அழுததாகவும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. சமந்தா நாயகியாக நடிக்கலாம் என்றும் தகவல். ஆனால், தெலுங்கு உரிமையை வாங்கியுள்ள நிறுவனம் படத்தில் யார் நடிக்கப் போவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளது.

'சர்கார்' படத்தின் டப்பிங் உரிமை மட்டும் சுமார் 6 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி, விஜய் - அடுத்தது சூர்யாரஜினி, விஜய் - அடுத்தது சூர்யா நட்சத்திரங்களைத் தொடும் போது... மேகா ஆகாஷ் மகிழ்ச்சி நட்சத்திரங்களைத் தொடும் போது... மேகா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

JMK - Madurai,இந்தியா
01 அக், 2018 - 12:06 Report Abuse
JMK ரஜினி மட்டும் தான் தமிழ் தெலுகு மலையாளம் கன்னடம் & ஹிந்தி மார்க்கெட் உள்ள ஒரே இந்திய நடிகர் . ஆனா விஜய்க்கு தெலுகு மார்க்கெட் சுத்தமா கிடையாது 6 கோடி கொடுத்து வாங்கின disatributers பணம் வூ வூ
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
01 அக், 2018 - 03:53 Report Abuse
 nicolethomson இவ்ளோ நாளா மகேஷ் பாபு படத்தை காபி அடிச்சு நடிச்சவனுக்கு வாழ்வு கொடுத்த முருகதாஸ் வாழ்க
Rate this:
மங்காத்தாமண்டயன் எங்க தல படம் வரட்டும் தெலுங்கு ல மட்டும் 10000000 கோடிக்கு விற்பனையாகும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in