சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தமிழ் சினிமாவின் சமீபத்திய சூப்பர்ஹிட் படங்களில் ஒன்று 'கடைக்குட்டி சிங்கம்'. இந்தப் படம் வெளியான அன்று ஒரு டிவி சீரியல் போல உள்ளதாக விமர்சித்தவர்களின் முகத்தில் கரியைப் பூசி இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. 75 நாட்களைக் கடந்தும் படம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 கோடியும், மற்ற மாநிலங்களில் 10 கோடியும், வசூலித்த இந்தப் படம் மொத்தமாக சுமார் 70 கோடியை வசூலித்துள்ளது. 100 சதவீதத்திற்கும் மேலான லாபத்தைக் கொடுத்துள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவை மூலம் சுமார் 10 கோடி தயாரிப்பாளருக்குக் கிடைத்திருக்கும்.
தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என அனைவருக்கும் சமீப காலத்தில் முழு லாபத்தைக் கொடுத்த படம் என 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை கோலிவுட்டில் குறிப்பிடுகிறார்கள்.