கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பல குறும்படங்களை தயாரித்ததுடன், குறும்பட விழாக்களை நடத்தி வந்த டீக்கடை சினிமா நிறுவனம் முதன் முறையாக சினிமா தயாரிப்பில் இறங்கி உள்ளது. கிரவுட் பண்டிங் முறையில் அருவி பிலிம் பேக்டரியுடன் இணைந்து, சில்லாக்கி டும்மா என்ற படத்தை தயாரிக்கிறது.
இதில் அட்டு படத்தில் நடித்த ரிஷி ரித்விக் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் அபிஷேக், சரவண சக்தி, தீனா நடிக்கிறார்கள். ஹிரோயின் தேர்வு நடந்து வருகிறது. கந்தசாமி மாறன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
இது மூன்று கேங்ஸ்டர்களுக்கிடையே ஒரு நாளில் நடக்கும் கதை. படத்தின் தலைப்பை பார்த்து யாரும் அடல்ட்ஸ் படமாக நினைத்துவிடக்கூடாது . இது எல்லாருக்கும் பிடிக்கும்படியான கதையாக இருக்கும். என்றார்.
படத்தின் துவக்க விழா நீண்ட நாட்களுக்குப் பின்பு ஏவிஎம் ஸ்டுடியோவின் கார்டன் பகுதியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் ஆதிக் ரவிச்சந்திரன், சண்முகம் தாஸ் கந்தசாமி, ராகவன், சாம் ஆண்டன், மற்றும் பலர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.