வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கார்த்திக் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் நாயகியாக நடித்தவர் கேத்ரின் தெரசா. அதன்பிறகு சில படங்களில் நடித்தவர் கடைசியாக சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு -2 படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது சிம்புவை வைத்து சுந்தர்.சி இயக்கி வரும் படத்திலும் கேத்ரின் தெரசா இணைந்துள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தற்போது இன்னொரு நாயகியாக கேத்ரினாவும் நடிக்கிறார். இவர், தெலுங்குப் பதிப்பில் பிரணிதா நடித்த ரோலில் நடிக்கிறார்.
இந்த படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்குகிறது.