மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகை சமந்தா, அவரது கணவர் நடிகர் நாகசைதன்யாவுடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு அவருடைய இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் கிளாமரான உடை அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்காக அவரை கடுமையாக விமர்சனம் செய்து ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தப் புகைப்படத்திற்கு 8 லட்சத்தை நெருங்கி லைக்குகள் வந்தாலும் 5000 கமெண்ட்டுகள் வந்துள்ளன. பெரும்பாலானோர், திருமணத்திற்குப் பிறகு இப்படிப்பட்ட போஸ்களைக் கொடுப்பதை சமந்தா தவிர்க்க வேண்டும் என்றும், அக்கினேனி குடும்பத்தின் மருமகளான பின் எதற்கு இப்படி புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அக்கினேனி குடும்பத்திற்கென ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அது கெடாமல் சமந்தா பார்த்துக் கொள்ள வேண்டும் என அக்கினேனி நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா ரசிகர்கள் கேட்டுக கொண்டுள்ளனர். இருப்பினும் நேற்றும் சமந்தா அது போன்ற புகைப்படம் ஒன்றை மீண்டும் வெளியிட்டுள்ளார். இந்த முறை கால் மறைக்கப்பட்ட புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது.