தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விமலா ராமனுக்கு பிறகு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கும் நடிகை ஆஷிமா நெர்வால். பூர்வீகம் ஹரியானா. பிறந்து வளர்ந்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில். அங்க நடந்த மிஸ்.ஆஸ்திரேலியா, மிஸ்.சிட்னி, மிஸ்.இண்டியா குளோபல் போட்டிகளில் டைட்டில் வென்றதும் மாடலிங் பக்கம் சென்றார். பின்னர் மை சன் சூப்பர்மேன் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.
தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் கொலைகாரன் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்தப் படம் முடியும் முன்பே ஆரவ் நடிக்கும் ராஜ பீமா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் யானை முக்கிய கேரக்டரில் நடிக்கிறது. ஆஷிமா ஆரவின் காதலியாகவும், விலங்குகள் நல ஆர்வலராகவும் நடிக்கிறார். ஆஷிமா யானையுடன் பல காட்சிகளில் நடிக்க வேண்டியதிருப்பதால் யானையுடன் பழகும் பயிற்சி எடுத்துக் கொள்ள இருக்கிறார். இந்தப் படத்திற்காக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். தற்போது கொலைகாரன் படத்தில் நடித்து வரும் ஆஷிமா அதை முடித்துக் கொடுத்து விட்டு ராஜ பீமாவில் நடிக்க இருக்கிறார்.