ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கிஷோர் தற்போது நடித்து வரும் படம் பசுமை வழி சாலை. இது சென்னையிலிருந்து சேலம் வரை போடப்படுவதாக இருக்கும் பசுமை வழிச்சாலையை பின்புலமாக கொண்ட படம். இதில் கிஷோருடன், பசுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார், சத்வா புரொடக்ஷன் சார்பில் நிருபமாக தயாரிக்கிறார். சந்தோஷ் இயக்குகிறார்.
சென்னை சேலம் பசுமை வழி சாலைக்காக இந்தியாவில் உள்ள முக்கிய பசுமை வழி சாலைகளில் பயணித்து அதன் அனுபவங்களை சேகரிக்கிற ஒரு சமூக ஆர்வலர் கேரக்டரில் கிஷோர் நடிக்கிறார். இதற்காக அவர் நிஜமாகவே பெங்களூரில் இருந்து பைக்கில் புறப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக், திபெத், நேபாள், வழியாக பூடான் வரை சென்று கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு குழுவினர் கார், வேனில் அவரை பின் தொடர்ந்து படம்பிடித்து வருகிறார்கள். இந்தப் படம் தமிழ் சினிமாவின் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார்கள்.