Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்க்கு சர்வதேச சிறந்த நடிகர் விருது

23 செப், 2018 - 10:15 IST
எழுத்தின் அளவு:
Vijay-won-best-international-actor-in-IARA-awards-for-mersal

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் மெர்சல். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை கடந்து உலகம் முழுக்க வெளியானது.

மூன்று வேடங்களில் விஜய் நடித்துள்ள இந்த படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.


மெர்சல் படத்திற்காக ஐஏஆர்ஏ ( INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDS ) என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.


இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த நடிகர் விஜய், தற்போது சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐஏஆர்ஏ அறிவித்துள்ளது. சர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் விஜய்யுடன், ஏஜென்ட் திரைப்பட நடிகர் கும்புலானி கே சபியா, சில்ட்ரன் ஆப் லெஸ்ஸர் காட் நடிகர் ஜோஷுவா ஜாக்சன் , சைட் சிக் கேங் நடிகர் அட்ஜெட்டே அனாங் உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர்.


Advertisement
கருத்துகள் (23) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயம் ரவி - காஜல் படம் ஆரம்பம்ஜெயம் ரவி - காஜல் படம் ஆரம்பம் சசிகலாவாக நடிக்கும் வரலட்சுமி சரத்குமார் சசிகலாவாக நடிக்கும் வரலட்சுமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (23)

Karthikeyan - Trichy,இந்தியா
24 செப், 2018 - 17:32 Report Abuse
Karthikeyan தமிழனுக்கு தமிழந்தான் கேடுநினைக்கிறாங்க. ஆல் தி பெஸ்ட் திரு.விஜய். கண் தெரியாம கை கால் ஊனமா கெட்டப்ப மாத்தி நடிச்சா அது போலி நடிப்பு அது இயக்குனரின் வெற்றி நடிகரின் சிறந்த நடிப்பு இல்லை. இயக்குனரை மீறி தன் பாணியில் நடித்து மக்களை ரசிக்க வைப்பவன்தான் சிறந்த கலைஞன் சிறந்த நடிகர். வாழ்த்துகள் விஜய் அவர்களுக்கு.
Rate this:
23 செப், 2018 - 16:19 Report Abuse
KrishnaMurthy உலகம் முழுவதும் தெரியப்படுத்திய தமிழ் படம் மெர்சல் விஜய்க்கு வாழ்த்துக்கள்
Rate this:
23 செப், 2018 - 15:14 Report Abuse
RajanKumar 2018 in siranda comedy, mokka Vijay in mokka virudu
Rate this:
மங்காத்தாமண்டயன் இதெல்லாம் எங்க தல(வலி) யால் நினைத்து பார்க்க முடியுமா
Rate this:
23 செப், 2018 - 14:56 Report Abuse
RamuSoman இவருக்கு நடிக்க தெரியுமா?
Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in