இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திரைப்படங்கள் தான் போட்டியில் வெளியாகும் என்று பார்த்தால் திரைப்படங்களின் இசை வெளியீடும் போட்டி போட்டு நடக்க உள்ளன. தமிழ் சினிமா உலகில் இந்த ஆண்டின் முக்கியமான படங்களாக எதிர்பார்க்கப்படும் படங்கள் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் 'வர்மா', வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வடசென்னை', லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களின் இசை வெளியீடு அடுத்த இரண்டு நாட்களில் நடைபெற்ற உள்ளன.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள 'வட சென்னை' படத்தின் இசை வெளியீடு நாளை, விழா இன்றி இணையதளங்களில் வெளியாகிறது. இந்தப் படம் சந்தோஷ் நாராயணனின் 25வது படம். இப்படத்தின் டிராக் லிஸ்ட் வெளியிடப்பட்டுவிட்டது.
'வர்மா' படத்திற்கு அதன் தெலுங்கு ஒரிஜனலின் இசையமைப்பாளர் ரதன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா ஆகியோரில் ஒருவர்தான் இசையமைக்க வேண்டும் என பாலா விரும்பியதாகவும், ஆனால், அதை துருவ்வின் அப்பா விக்ரம் ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது. இப்படத்தின் இசை வெளியீடு, டீசர் வெளியீடு நாளை நடைபெற உள்ளது.
'சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பாடல்களின் பிரிவியூ ஏற்கெனவே வெளியாகியுள்ளது. இந்த மூன்று படங்களுக்கான இசைப் போட்டி இப்போதே ஆரம்பமாகிவிட்டது.