இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்குப்பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள மெகா படம் வட சென்னை. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் பாடல்கள் செப்டம்பர் 23-ந்தேதி(நாளை) இணையதளத்தில் வெளியாகிறது. இந்நிலையில், பாடல்களின் டிராக் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு-
1. சந்தநாதா - என்ற பாடலை கானா பாலா எழுதி, பாட அவருடன் கா.கா.பாலசந்தரும் இணைந்து பாடியுள்ளார்.
2. கோவிந்தம்மாவல்ல - பாடலை ரோகேஷ் எழுத, தனுஷ் பாடியுள்ளார்.
3. கார்குழலி கடவாயே - பாடலை விவேக் எழுத, ஸ்ரீராம், விஜய் நரேன், அனந்து, சந்தோஷ் நாராயணன், பிரதீப்குமார் பாடியுள்ளனர்.
4. மடியில நிற்கும் மான்குட்டி - பாடலை கானா பாலா எழுதி, பாட, அவருடன் தீ என்பவரும் பாடியுள்ளார்.
5. என்னடி மாயாவி நீயே - பாடலை விவேக் எழுத, சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.
6. எப்படியெம்மா - பாடலை சிந்தை ரவி என்பவர் எழுதி பாடியுள்ளார்.
7. மதியா சேரலையா - பாடலை அறிவு எழுதி, பாடியிருக்கிறார்.
8. அலங்கார பந்தல் - பாடலை தோலக் ஜெகன் எழுதி, பாடியுள்ளார்.