ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் படம் என்ஜிகே. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். தீபாவளிக்கு வெளியாகயிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமானால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர். படத்தின் இறுதிகட்ட பணிகள் முடியும் வரை எந்த அப்டேட்டும் வெளியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, என்ஜிகே, பாடல்கள் பற்றி ஒரு பேட்டியில் கூறியதாவது : என்ஜிகே படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த படத்திற்காக ஏற்கனவே பதிவு செய்த பாடல்களை அழித்துவிட்டு, மீண்டும் புதிதாக டியூன் ரெடி பண்ணி வருகிறோம். ஏனென்றால் படத்தின் கதை, மிக வலிமையாக உள்ளது. அதற்கு ஏற்றபடி பாடல்களை ரெக்கார்டிங் செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.