இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
'நோட்டா' என்பதே தேர்தல் சம்பந்தப்பட்ட வார்த்தை தான். படத்திற்கு அப்படிப் பெயர் வைத்துவிட்டு, அது சம்பந்தமாக ஏதாவது செய்து தானே ஆக வேண்டும். அதனால் தான், படக்குழுவினர் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க ஒரு வாக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள்.
படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா அவருடைய டுவிட்டர் தளத்தில் 'நோட்டா' படத்தின் வெளியீட்டை எப்போது வைத்துக் கொள்ளலாம் என ஒரு வாக்கெடுப்பை அறிவித்திருக்கிறார். அக்டோபர் 5, 10, 18 ஆகிய தேதிகளுடன் 'நோட்டா'வும் வாக்கெடுப்பில் இடம் பெற்றிருக்கிறது. இந்த 'நோட்டா' மூன்றிலும் விருப்பமில்லை என்பதற்கான 'நோட்டா'.
அதிசயமாக 'நோட்டா'விற்குத்தான் 36 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர். 35 சதவீத வாக்குகள் 5ம் தேதிக்கும், 14 சதவீதம் 10ம் தேதிக்கும், 15 சதவீதம் 18ம் தேதிக்கும் கிடைத்தன.
வாக்கெடுப்பின் பிடி நோட்டா 1 சதவீத வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும், இந்த நோட்டா 36 சதவீதத்தையும், அக்டோபர் 5, 35 சதவீதத்தையும் இணைத்து அக்., 5-ம் தேதி படம் வெளியீடு என அறிவித்துள்ளனர்.
நோட்டா அறிவிப்பிலும் என்ன ஒரு அரசியல்?