பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் '2.0'. இப்படத்தின் வெளியீடு நவம்பர் 29 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு ஒரு மாதம் முன்னதாகவே படத்தின் விஎப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் முடிவடைந்துவிட வேண்டுமென இயக்குனர் ஷங்கர் கேட்டுக் கொண்டுள்ளாராம்.
படத்தின் பின்னணி இசை, ஒலிப்பதிவு ஆகியவற்றை உலகத் தரத்திற்கு ஏற்ப கொடுக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். அதனால், கிராபிக்ஸ் பணிகள் ஒரு மாதம் முன்னதாகவே நடந்து முடிந்தால் தான் அவற்றைத் தெளிவாகச் செய்ய முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். ஏற்கெனவே கிராபிக்ஸ் வேலைகளின் தாமதம் காரணமாகத் தான் படத்தின் வெளியீடு தள்ளித் தள்ளிப் போனது. இந்த முறை அது மேலும் தள்ளிப் போகக் கூடாது என்றுதான் தயாரிப்பு நிறுவனமும் நினைக்கிறதாம்.
படத்தின் டீசர் வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் அடுத்த மாதம் டிரைலர் வெளியீடு, மீதமுள்ள ஒரு பாடல் வெளியீடு ஆகியவை நடக்கலாம் என்கிறார்கள்.