டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் விஜய குமாரின் மகள் வனிதா. சில படங்களில நடித்திருக்கிறார். இவருக்கும், விஜய குமாருக்கும் கடந்த சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் ரோட்டில் சண்டை போட்டது பெரும் பரபரப்பானது.
இந்நிலையில், சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அஷ்டலட்சுமி நகர் 19வது தெருவில், விஜயகுமாருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இங்கு திரைப்படங்கள் எடுப்பதற்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார் மகள் வனிதா, சினிமா படப்பிடிப்பு எடுப்பதற்காக வாடகைக்கு எடுத்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தது. ஆனால் அவர் வாடகை எடுத்த வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்தார். விஜயகுமார் கேட்டபோது, இது என்னுடைய சொத்து காலி செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் விஜயகுமார் மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். மதுரவாயல் போலீசார் விசாரணை செய்ய வனிதாவை அழைத்தனர். இன்று அவர் காலையில் காவல் நிலையத்துக்கு வந்தார். தகவல் அறிந்த செய்தியாளர்கள் வனிதா வீட்டிற்கு சென்று செய்தி சேகரிக்க சென்ற போது நிருபர்களிடம் வனிதா தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்தார்.