அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
முஸ்தபா முஸ்தபா, அந்த அரபிக்கடலோரம் உள்பட பல ஹிட் பாடல்களை பாடியிருப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது விஜய் நடித்துள்ள சர்கார், மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், அடுத்தபடியாக ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்திற்கு இசையமைக்கிறார்.
சீமராஜா வெளியாகி ஓடிக்கொண்டிருப்பதை அடுத்து ரவிக்குமார் இயக்கும் படவேலைகளில் ஈடுபட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்துள்ள ஓப்பனிங் பாடலைக் கேட்ட சிவகார்த்திகேயன், ரவிக்குமார் ஆகியோர் அந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மானையே பாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு அவரும் சம்மதம் சொல்லி விட்டாராம். ஆக, சிவகார்த்திகேயனுக்காக ஓப்பனிங் பாடல் போடப் போகிறார் ரஹ்மான்.