சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் வெற்றியடைந்ததினால் சிங்கம் என்ற தலைப்பில் பல படங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்தப்பட்டியலில் இணைந்துள்ளது 'கொம்பு வச்ச சிங்கம்'.
'சுந்தரபாண்டியன்' படத்தில் இணைந்த இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனும், சசிகுமாரும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள். அந்தப்படத்தின் பெயர் தான் 'கொம்பு வச்ச சிங்கம்'.
விக்ரம் பிரபுவை வைத்து இயக்கிய 'சத்ரியன்' படத்தை தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் படம் இது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
வழக்கமாக சசிகுமார் படத்தில் முன்னணி கதாநாயகிகளுக்கு வேலை இருக்காது. புதுமுக நடிகை அல்லது வளர்ந்து வரும் நடிகைகளையே கதாநாயகி ஆக்குவார் சசிகுமார். முதன்முறையாக கொம்பு வச்ச சிங்கம் படத்துக்கு கீர்த்தி சுரேஷை கதாநாயகியாக புக் பண்ணியுள்ளனர். அவருக்கு 1 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல்.
இந்த படத்தில் யோகி பாபு, சூரி இருவரும் காமெடியன்களாக நடிக்கின்றனர். பிக்பாஸ் ஆரவ் முக்கிய வேடத்தில் அதாவது வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடக்க இருக்கிறது.