இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரையுலகத்தில் எப்படியோ, ஆனால், தெலுங்குத் திரையுலகத்தில் தற்போதைக்கு நம்பர் 1 சமந்தா என்று தாராளமாகச் சொல்லாம். இந்த 2018ம் ஆண்டில் சமந்தா நடித்து வெளிவந்த ரங்கஸ்தலம், மகாநதி, இரும்புத்திரை ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. கடந்த வாரம் வெளியான சீமராஜா, யு டர்ன் ஆகிய இரண்டு படங்களுமே கடந்த மூன்று நாட்களில் குறை வைக்காத வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இந்த மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாக இந்த ஆண்டு சமந்தாவின் முதல் சூப்பர் ஹிட் படமான ரங்கஸ்தலம் படத்தில் சமந்தா நடித்த பாடலான ரங்கம்மா...மங்கம்மா.. பாடல் யு டியூபில் 10 கோடி பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்த பாடலை சந்திரபோஸ் எழுத மானசி பாடியுள்ளார். சரியான நாட்டுப்புறப் பாடலாக இருக்கும் இந்தப் பாடல் வெளியான போதே சூப்பர்ஹிட்டானது.
சமந்தாவின் நடனமும், கிளாமரும்தான் இப்பாடலை இந்த அளவிற்குப் பேச வைத்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகத்தில் ஒய் திஸ் கொலவெறி பாடலுக்குப் பிறகு அதிக பார்வைகளைப் பெற்ற பாடலாக இந்த ரங்கம்மா..மங்கம்மா...பாடல் இடம் பிடித்துள்ளது.