இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மெட்ரோ படத்தில் நடித்து பிரபலமானவர் சிரிஷ். அதையடுத்து அவர் நடித்துள்ள படம் ராஜா ரங்குஸ்கி. இந்த படத்தை ஜாக்சன்துரை, பர்மா படங்களை இயக்கிய தரணிதரன் இயக்கியுள்ளார். நாயகியாக சாந்தினி நடித்துள்ளார்.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சாந்தினி பேசும்போது, நானும், சிரிசும் எல்லா காட்சிகளிலுமே சிங்கிள் டேக்கில் ஓகே செய்தோம். ஆனால் ஒரேயொரு காட்சியில் மட்டும் நான் சரியாக நடித்தபோதும், சிரிஷ் 19 டேக் வாங்கினார் என்று பேசியவர் அது என்ன காட்சியென்று சொல்லவில்லை.
அதையடுத்து பேச வந்த சிரிசும் அந்த காட்சி குறித்து பேசாமலேயே சென்று விட்டார். பின்னர் அவரிடம் அதுகுறித்து கேட்டபோது, இந்த படத்தில் ஒரு லிப்லாக் காட்சி உள்ளது. அதில் நடிக்க எனக்கு தயக்கமாகவும், கூச்சமாகவும் இருந்தது. அதனால்தான், திரும்பத்திரும்ப ரீடேக் ஆகி விட்டது என்றார்.