'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மணிரத்னம் இயக்கியுள்ள படம் செக்கச் சிவந்த வானம். இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார் பிரபல மாடல் அழகி டயான எரப்பா. படத்தில் அவர் சிம்பு ஜோடியாக நடிக்கிறார்.
கர்நாடகத்திலுள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். பின்பு 2012 இல், உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் எலைட் மாடல் லுக் போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்றார்.
பின்பு கிங்ஃபிஷர் காலெண்டர் 2015 மற்றும் 2017, லாக்மே பேஷன் வீக், அமேசான் பேஷன் வீக், கௌச்சர் வீக் போன்ற பிரசதிபெற்ற பேஷன் பத்திரிக்கைகளில் இடம்பெற்றார் . இவரது எளிமையான அழகு, நளினம் மற்றும் நடையழகு ஆகியவை அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பேஷன் பத்திரிக்கைகள் இவரை ஒரு இளவரசியாக கொண்டாடின.மேலும் சர்வதேச பேஷன் பத்திரிக்கைகளான வோக், எல்லி, ஹார்ப்பர்ஸ் பஜார், காஸ்மோபொலிட்டன் மற்றும் ஜி.கியூ போன்றவைகளில் இவரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
10க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்துள்ளார். மணிரத்தினத்தில் அறிமுகங்கள் எப்போது ஜெயித்து விடுவார்கள். அந்த வரிசையில் டயனா தமிழில் ஜெயிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.